
நன்றாக பேச மட்டுமே தெரிந்த டான்ஸ்ரீ சஹிடான் காசிம் அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் ஏமாற்றம் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்கள் அதே பழைய முகங்கள்.
கடந்த அமைச்சரவையில் சிறந்த அடைவு நிலையை வெளிப்படுத்தாவர்கள் மீண்டும் அமைச்சர்களா என்று அவர் கேள்வியை எழுப்பினார்.
