28.5 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

இலங்கைத் தமிழர் நலன்களுக்கு 317 கோடி ரூபாய் ஒதுக்கீடு! தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

🔥 Views : 9
👁 Reading Now : 31

கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்றால், கடல் கடந்து வாழும் தமிழர்களின் கண்ணீரால் என்று எழுதினார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா.
அத்தகைய பேரறிஞர் அண்ணா வழி நடக்கக்கூடிய இந்த திமுக அரசின் சார்பில், கடல் கடந்து வந்த இலங்கைத் தமிழ் மக்களின் கண்ணீரைத் துடைக்கக்கூடிய வகையில் 317 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
இலங்கை நாட்டில் வாழும் தமிழ் மக்கள் 1983-ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்திற்குப் பிறகு, கடல் கடந்து தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கினார்கள்.
அத்தகைய தமிழ் மக்களை அன்று முதல் இன்று வரையிலும் நாம் அரவணைத்துக் காப்பாற்றி வருகிறோம்; அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கி வருகிறோம்.
இலங்கைத் தமிழர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் பல உதவிகள் வழங்கப்பட்டன.
இப்போது திமுக அரசு சார்பில் இலங்கை தமிழர் நலனுக்காக 317 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாக அவர் அறிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles