28.5 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

60 வெள்ளி கட்டணத்தில் கோவிட் மருத்துவப் பரிசோதனை

🔥 Views : 11
👁 Reading Now : 31

சுமார் 60 வெள்ளி கட்டணத்தில்
கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ள பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதாக புக்கிங் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் தெரிவித்தார்.
புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் இந்த கோவிட் பரிசோதனை கொம்ப்ளெக்ஸ் அரேனா பெட்டாலிங் ஜெயாவில் நடைபெறுகிறது.
ஆண்டிஜென் விரைவு சோதனைக் கருவியைக் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த கோவிட்-19 பரிசோதனை இயக்கம் தினசரி காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி நடைபெறுகிறது.
அதிகமான பொதுமக்கள் இந்த பரிசோதனையில் பங்கேற்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
இதன் மூலம் நோய்த் தொற்று உள்ளவர்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு தனிமைப்படுத்த முடியும்.
மேலும் இதன் வழி நோய்த் தொற்று மற்றவர்களுக்கு பரவுவதையும் தடுக்க முடியும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles