29.6 C
Kuala Lumpur
Sunday, September 20, 2026

Vetri

ஜெராம் மற்றும் ஈஜோக்கில் இரு மின் சுடலைகள் நிர்மாணிக்க விண்ணப்பங்கள்

🔥 Views : 27
👁 Reading Now : 70

ஜெராம் மற்றும் ஈஜோக் ஆகிய பகுதியில் இரு மின்சுடலைகளை நிர்மாணிப்பதற்கு விண்ணப்பம் கிடைத்துள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் தெரிவித்தார்.
அதற்கான திட்டமிடல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் மின்சுடலைகளின் பற்றாக்குறை தொடர்பில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் மற்றும்
பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியு கீ ஆகியோர் கேள்வியை எழுப்பியுள்ளனர்.
ஷா ஆலம், பெட்டாலிங் ஜெயா, கிள்ளான், சுபாங் ஜெயா, சிப்பாங் ஆகிய பகுதிகளில் மின் சுடலைகள் உள்ளன.
தற்போது கோலலங்காட் மாவட்ட மன்றத்தின் தஞ்சோங் டுவா பெலாஸ் துணை மாவட்டத்தில் உள்ள ஜாலான் செர்டாங் பெலா பகுதியில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் மின்சுடலையை நிர்மாணிப்பதற்கான திட்டம் கைவசம் உள்ளதாகவும் டத்தோ தெங் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles