
நாட்டில் கோவிட் நோய்த்தொற்றுக்கு இதுவரை 15 ஆயிரத்தை 802 பேர் மரணம் அடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் 24 மணி நேரத்தில் 252 பேர் இந்த நோய்க்கு பலியானதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் இஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
தற்போது நாடு முழுவதும் மருத்துவமனையில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 540 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றார் அவர்.
