25.3 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

பாதுகாவலர் தாக்கப்பட்ட சம்பவம்! விசாரணை மீண்டும் தொடங்கியது

🔥 Views : 9
👁 Reading Now : 59

நீச்சல் குளம் அருகில் பாதுகாவலர் ஒருவர் தாக்கப்பட்டு எட்டு மாதத்திற்கு பின்னர் இப்போது மரணம் அடைந்திருக்கிறார்.
இவன் மரணம் தொடர்பில் போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கி இருப்பதாக பேரா மாநில போலீஸ் தலைவர் மியோர் தெரிவித்துள்ளார்.
இந்த பாதுகாவலர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஆடவர் ஒருவரால் இந்த பாதுகாவலர் கடுமையாக தாக்கப்படுகிறார்.
இப்போது எட்டு மாதங்களுக்குப் பின்னர் இந்த பாதுகாவலர் மரணம் அடைந்திருக்கிறார்.
நுரையீரலில் கிருமி தொற்றிய தொடர்ந்து இவர் இறந்ததாக சவப் பரிசோதனை அறிக்கை கூறுகிறது.
ஆனால் இதை ஏற்றுக்கொள்ள அவரது குடும்ப உறுப்பினர்கள் மறுத்து வருகிறார்கள்.
கடுமையாகத் தாக்கப்பட்டு அதன் காரணமாக இவர் இறந்தார் என்று அவரது குடும்பத்தினர் கூறி வருவதால் போலீசார் மீண்டும் இந்த விசாரணையை தொடங்கி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பாதுகாவலரை தாக்கிய நபர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் இந்த நபரால் தாக்கப்பட்ட பாதுகாவலர் இறந்திருக்கிறார்.
புதிய ஆதாரங்கள் அடிப்படையில் போலீசார் மீண்டும் விசாரணை தொடங்கி இருப்பதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles