29.6 C
Kuala Lumpur
Sunday, September 20, 2026

Vetri

கைது செய்யப்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகளில் இருவர் மலேசியர்களா?

🔥 Views : 41
👁 Reading Now : 25

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் படையினரால் பல ஐஎஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இருவர் மலேசியர்கள் என்று கூறப்படுவது தொடர்பில் மலேசிய போலீஸ் படை உறுதிப்படுத்தி வருவதாக போலீஸ் படை தலைவர் டத்தோஸ்ரீ அக்ரில் சானி தெரிவித்தார்.
காபூலில் நடந்த சண்டையில் ஆறு பல தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இதில் இவர்கள் மலேசியர்கள் என்று பிரிட்டன் டைம்ஸ் செய்தியை வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதலில் மலேசியர்கள் சம்பந்தப் பட்டிருக்கிறார்களா என்ற விபரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று டத்தோஸ்ரீ அக்ரில் சானி தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன்னர் காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles