25.3 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

பினாங்கு மக்களுக்கு தகுதிக்கேற்ற வீடுகள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்

🔥 Views : 12
👁 Reading Now : 43

பினாங்கு மாநிலத்தில் வசிக்கும் வசதிக் குறைந்த மக்களுக்கு தகுதிக்கேற்ற வீடுகள் கிடைப்பதை வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சு உறுதி செய்ய வேண்டும்.
வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 220 ,000 வீடுகளைக் நிர்மாணிக்க மாநில அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்கும் வேளையில்,இதுவரையில் பல்வேறு கட்டங்கள் மூலம் 119 ,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களும் அவற்றில் குடியேறி விட்டதாக மாநில வீடமைப்பு,ஊராட்சி,நகர் மற்றும் கிராமப்புற ஆட்சிக்குழு உறுப்பினர் ஜக்டிப் சிங்
டியோ கூறினார்.
பினாங்கு மக்களுக்கு வீடுகள் கிடைப்பதில் மத்திய அரசாங்கத்தின் உதவிகள் என்ன என்பதை நாங்கள் கவனிப்போம் என்றார்.
நாட்டின் புதிய அரசியல் திருப்பத்தில் பினாங்கிற்கு உதவிகள் வந்து சேர வேண்டுமென அவர் தெரிவித்தார்.
இங்கு பாயான் பாருவில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்பு பகுதிக்கு வருகைப் புரிந்த பின்னர் செய்தியாளர்களிம் இதனைத் தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles