31.8 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

மருத்துவமனையின் அலட்சியத்தால் நோயாளி கீழே விழுந்து இறந்தாரா?

சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இந்திய நோயாளி ஒருவர் கட்டிலிலிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்ததாக காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டு வருகிறது.
இன்று காலை கெடா சுங்கைப்பட்டாணி மருத்துவமனையில் நிகழ்ந்ததாக நம்பப்படும் இச்சம்பவத்தில் கீழே விழுந்த அந்த நோயாளி தட்டுத்தடுமாறி மீண்டும் கட்டிலில் எற முயன்ற போது,முடியாமல் கீழே விழுந்துள்ளார்.
அவரின் பரிதாப நிலையைக் அக்கம் பக்கத்துக்கு நோயாளிகள்,மருத்துவமனை தாதியர்கள் மற்றும் பணியாளர்களிடம் எடுத்துக் கூறியும் அவர்கள் உதவவோ அல்லது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியத்துடன் இருந்துள்ளனர்.
மேலும் உதவிக்கோரி மருத்துவமனை பணியாளரை நாடிய போது,அவருக்கு உயிர் இருக்கிறதா ? இல்லையா ? என்பதை நீங்களே பரிசோதித்து பாருங்கள் என கூறப்பட்டதாக நோயாளி ஒருவர் சொன்னார்.
இதுபோன்ற சம்பவங்கள் இங்கு இனிமேலும் நிகழாமலிருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles