
நோய்த்தொற்றினால் மரணமடையும் இஸ்லாம் அல்லாதோரின் சடலங்களை தகனம் செய்ய நியாயமான கட்டணத்தை சிலாங்கூர் அரசு நிர்ணயிக்கும் என்று ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸி ஹான் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் சுமையை குறைக்கும் வகையில் இந்த நியாயமான கட்டணம் விதிக்கப்படும் என்றார் அவர்.
மேலும் இவர்களின் சடலங்களை விரைந்து தகனம் செய்வதற்கும் மின் சுடலைகள் போதுமான இடத்தை ஒதுக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மின் சுடலைகள் அமைப்பதற்கு பொருத்தமான இடங்களை தேர்வு செய்யும்படி சிலாங்கூர் உள்ள ஊராட்சி மன்றங்களுக்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்று சிலாங்கூர் சட்டமன்ற கூட்டத்தில் தனது விவாதத்தை முடித்து வைத்து பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
