34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

பாதுகாவலர் மரணத்தை கொலையாக போலீசார் வகைப்படுத்தினர்

🔥 Views : 5
👁 Reading Now : 45

ஈப்போவில் பாதுகாவலர் ஒருவர் தாக்கப்பட்டு மரணமடைந்த சம்பவத்தை ஒரு கொலையாக போலீசார் வகைப்படுத்தியுள்ளனர.
நீச்சல் குளம் அருகில் பாதுகாவலர் ஒருவர் தாக்கப்பட்டு எட்டு மாதத்திற்கு பின்னர் இப்போது மரணம் அடைந்திருக்கிறார்.
இவன் மரணம் தொடர்பில் போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கினர் என்று பேரா மாநில போலீஸ் தலைவர் மியோர் தெரிவித்தார்.
நுரையீரலில் கிருமி தொற்றினால் இவர் இறந்ததாக சவப் பரிசோதனை அறிக்கை கூறுகிறது.
ஆனால் இதை ஏற்றுக்கொள்ள அவரது குடும்ப உறுப்பினர்கள் மறுத்து வருகிறார்கள்.
கடுமையாகத் தாக்கப்பட்டு அதன் காரணமாக இவர் இறந்தார் என்று அவரது குடும்பத்தினர் கூறி வந்ததால் போலீசார் மீண்டும் இந்த விசாரணையை தொடங்கினர்.
இப்போது பாதுகாவலர் மணத்தை ஒரு கொலையாக போலீசார் வகைப்படுத்தியுள்ளனர்சம்பந்தப்பட்டவர் மீது கடுமையான குற்றச் சாட்டு கொண்டுவரும்படி சட்டத்துறை அலுவலகத்தை கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
302 சட்டத்தின் இன் கீழ் இந்த புகாரை கொலை என்று வகைப்படுத்தி உள்ளோம் என்று அவர் கூறினார்.
இதனிடையே பாதுகாவல் தேவசகாயம் மரணம் தொடர்பி தொடர்பில் அவரின் குடும்பத்திற்கு ஜசெக சட்டசேவை உதவியை வழங்க முன் வந்திருப்பதாக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன் அறிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles