
தேசிய கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் பினாங்கு மாநிலத்தில் இதுவரையில் 62 .1 விழுக்காட்டினர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.
இதில் 1,101 லட்சம் பேர் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றுக் கொண்டு விட்டனர் என பினாங்கு மாநில ஆளுநர் துன் அகமட் புசி அப்துல் ரசாக் இன்று சட்டமன்றத்தில் கூறினார்.
மேலும் இதில் 711,454 பேர் அதாவது 40 .1 விழுக்காட்டு மக்கள் இரண்டு தடுப்பூசிகளை பூர்த்தி செய்துக் கொண்டு விட்டனர். இவ்வாண்டு செப்டம்பர் மாதத்திற்குள் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் உட்பட நூறு விழுக்காட்டினர் ஒரு தடுப்பூசியை செலுத்திக் கொள்வதை மாநில அரசாங்கம் உறுதி செய்யும் என இன்றுக் காலை பினாங்கு மாநில சட்டமன்றத் கூட்டத்தை தொடக்கி வைத்து அவர் உரையாற்றினார்.
