
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மின் சுடல்களை அமைப்பதற்கு பொருத்தமான இடங்களை தேர்வு செய்யும்படி சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களை சிலாங்கூர் மாநில அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
அந்த வகையில்
மின் சுடலைகள் அமைப்பதற்கு பொருத்தமான இடங்களை தேர்வு செய்யும்படி சிலாங்கூரில் உள்ள ஊராட்சி மன்றங்களுக்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸி ஹான் தெரிவித்தார்.
கோலசிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் கீழ் ஜெராம் மற்றும் ஈஜோக்கில் இரண்டு மீன் சுடலைகளும் காஜாங் நகராண்மைக் கழகத்தின் கீழ் பெர்னாங்கில் மின் சுடலையும் நிர்மாணிக்கப்படும் என்று இதற்கு முன்னர் இந்து, சீக்கிய, பெளத்த மற்றும் கிறிஸ்துவ சமயங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சான் கிம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
