26.4 C
Kuala Lumpur
Tuesday, July 28, 2026

Vetri

கிழே விழுந்து முதியவர் மரணம்! மனிதாபிமானம் செத்துவிட்டதா?

🔥 Views : 14
👁 Reading Now : 65
வயதான முதியவர் ஒருவர் தட்டுத்தடுமாறி
கீழே விழுந்து மரணமுற்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த முதியவர் கீழே விழுந்து மரணமுற்ற சம்பவம் பெரும் வேதனை தருகிறது..
ஆகவே இது தொடர்பில் சுகாதார அமைச்சும் போலீஸ் துறையும் உடனடியாக விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்றும்
பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் பேராக் மாநில முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் இன் இந்திய நலப் பிரிவு சிறப்பு அதிகாரி தினகரன் கேட்டுக் கொண்டார்.

கெடா மாநில சுங்கை பட்டாணி மருத்துவமனையில் நிகழ்ந்த இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. அந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லையா?
தாதியர்கள் இல்லையா? பணியாட்கள் இல்லையா என்ற கேள்வியையும் முன் வைத்தார் தினகரன். இச்சம்பவம் குறித்து பல கேள்விகளுக்கு அரசாங்க மருத்துவமனை நிர்வாகம் பதில் கூற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles