29 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

ஈட்டி எறியும் போட்டியில் உலக சாதனையுடன் தங்கம் வென்றார் இந்திய வீரர் சுமித் அண்டில்

🔥 Views : 9
👁 Reading Now : 44

ஜப்பான் தோக்கியோ பரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் உலக சாதனையுடன் தங்கம் என்று சாதனை படைத்திருக்கிறார்.
தொடக்கம் முதல் சிறப்பாக ஈட்டியை எறிந்த இவர் 68.55 மீட்டர் தூரம் எறிந்து புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இந்தப் போட்டியில் பங்கேற்ற இன்னொரு இந்தியரான சந்தீப் சவுத்ரி, 62.20 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து நான்காம் இடத்தைப் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் மைக்கேல் பூரியன் 66.29 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றினார். இலங்கையின் டுலான் கோடிதுவாக்கா வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதனிடையே பரா ஒலிம்பிக் போட்டியில் புதிய உலக சாதனையுடன் தங்கம் வென்று சாதனை படைத்த சுமித் அண்டிலுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles