30 C
Kuala Lumpur
Tuesday, July 28, 2026

Vetri

காபூல் விமான நிலையம் மீது சரிமாரி ராக்கெட் குண்டுவீச்சு!

🔥 Views : 17
👁 Reading Now : 62

அமெரிக்க தலிபானுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இன்று ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிவிட வேண்டும்.
தற்போது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் ஒவ்வொன்றாக வெளியேறி வருகின்றனன.
தற்போது 4 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் ஆப்கானிஸ்தானில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே காபூல் விமான நிலைய பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மற்ற நாட்டினரையும், ஆப்கானிஸ்தான் பொதுமக்களையும் தொடர்ந்து விமானங்கள் மூலம் அனுப்பி வருகின்றனர்.
அமெரிக்க படைகள் வெளியேறும் நேரத்தில் அவர்கள் மீது கடுமையான தாக்குதலை ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்தி வருகிறார்கள்.
கடந்த வியாழக்கிழமை ஐ.எஸ். பயங்கரவாதிகள் காபூல் விமான நிலையத்தில் 2 இடங்களில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். இதில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 180 பேர் பலியானார்கள்.
தற்போது பயங்கரவாதிகள் காபூல் விமான நிலையத்தை நோக்கி சரிமாரி ராக்கெட் குண்டுகளை நடத்தி வருகிறார்கள்.
இன்னும் 24 மணி நேரத்தில் அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறும் வேலையில் பாதிக்கப்பட்ட மக்களை பத்திரமாக அழைத்துச் செல்லும் பணியில் மும்முரமாக அமெரிக்கா வீரர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles