31.7 C
Kuala Lumpur
Sunday, July 5, 2026

Vetri

சங்காட் தோட்ட மக்களுக்கு உதவிகள் விரைந்தன

🔥 Views : 9
👁 Reading Now : 70

சிரமப்படுபவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை ஓடிவந்து வழங்குவதில் நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.
நகர்ப்புறம் அல்லது தோட்டப்புறம் என்று பாராமல் அனைவருக்கும் உதவிகள் செய்வோம் என நிபோங் திபால் தொகுதி மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் இரா.கவிக்குமார் தெரிவித்தார்.
அந்த வகையில் கோவிட் – 19 தொற்று காலத்தில் வேலைகளையும் நிரந்தர வருமானத்தையும் இழந்து சிரமப்படும் இங்குள்ள சங்காட் தோட்டத்தைச் சேர்ந்த இந்தியக் குடும்பங்களுக்கு உணவுக் கூடைகளை வழங்கியதாக சொன்னார்.
அதே சுங்கை ஜாவி,சுங்கை பாக்காப் ஆகிய சட்டமன்றத் தொகுதியிலுள்ள மூவின மக்களுக்கும் உதவிகளை தொடந்து வழங்கி வருவதாக கூறினார்.
பலர் தம்மையும்,கட்சியின் தொகுதி பொறுப்பாளர்களை தொடர்புக் கொண்டு உதவிகளை கோரி வருகின்றனர்.
இப்படி உதவிகள் தேவைப்படுவோருக்கு இல்லையென்று கூறாமல்,கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தலைமைத்துவத்தில் முடிந்த அளவிற்கு உதவிக்கரம் நீட்டி வருவதாக இரா.கவிக்குமார் மேலும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles