28.8 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஏகாம்பரம் கீழே விழுந்து மரணம்! விசாரணை தொடங்கியது

கெடா சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோத தவறி கீழே விழுந்து இந்திய முதியவர் ஏகாம்பரம் கிட்டு (வயது 74) மரணமடைந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணையை தொடங்கியிருப்பதாக மாநில சுகாதார இயக்குனர் டாக்டர் ஒஸ்மான் பின் வாரிஜோ தெரிவித்துள்ளார்.
4ஆவது கட்ட கோவிட் -19 தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் 26 -ஆம் தேதி அந்த வயதான முதியவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இருப்பினும் அவருக்கு பல்வேறு நோய்களும் உள்ளது.
சுவாசக் கருவி பொறுத்தப்பட்டும் அவரின் நிலை சீராக இல்லை எனவும்,தாய்மொழி பேசவும்,விளங்கிக் கொள்ளவும் கூடிய மருத்துவப் பணியாளர்தான் அவரை கவனித்து வந்ததாகவும் சொன்னார்.
காலையில் வார்டுகளில் உள்ள நோயாளிகளை கவனித்தப் பின்னர்,பிற்பகல் 1.45 சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரியும ,தாதியும் தங்களின் பிபிஇ ( PPE ) உடையை சுழற்றி வைத்து விட்டதாகவும் கூறினார்.
பிற்பகல் சுமார் 2 .25 மணியளவில் முதியவர் கீழே விழுந்து விட்டது குறித்து கேள்வியுற்று,5 நிமிடத்தில் அங்கு வந்த மருத்துவ அதிகாரி பரிசோதனைக்குப் பிறகு அவர் இறந்து விட்டதாக உறுதி செய்துள்ளார்.
இருப்பினும் அந்த முதியவரின் மோசமான நிலை குறித்து,அன்று மாலையிலேயே முதியவரின் நிலை குறித்தும்,நடந்த சம்பவம் குறித்தும் குடும்பத்தாரிடம் தெரிவிக்கப்பட்டு விட்டது.
குடும்பத்தாரும் மருத்துவமனையின் விளக்கத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு விட்டதாகவும்,இனிமேல் இந்த சம்பவம் குறித்த காணொளியை பரப்புவதை நிறுத்திக் கொள்ளுமாறு இயக்குனர் டாக்டர் ஒஸ்மான் பின் வாரிஜோ தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles