31.7 C
Kuala Lumpur
Sunday, July 5, 2026

Vetri

கம்போங் ஜாவி பன்றி வளர்ப்பு உரிமையாளருக்கு செபராங் பிறை மாநகர் மன்றம் நோட்டீஸ்

🔥 Views : 8
👁 Reading Now : 29

பன்றி வளர்ப்பு பிரச்சனையால் தென் செபராங் பிறை,கம்போங் ஜாவியில் வசிக்கும் மக்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தில் சம்பந்தப்பட்ட பன்றி வளர்ப்பு உரிமையாளருக்கு செபராங் பிறை மாநகர் மன்றம் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியுள்ளது.
இங்கு வசிக்கும் மக்களின் சுகாதாரத்திற்கும்,பாதுகாப்பிற்கும் முன்னுரிமை வழங்காமல் இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில்,சொந்த விருப்பத்தில் வேலிகளை அமைத்து வரும் அவர் 36 நாட்களுக்குள் தமது நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மீறினால் எம்பிஎஸ்பி நடவடிக்கையில் இறங்கும் என நேற்று அவரது நிலத்தின் வாயிலில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு மக்கள் எதிர்நோக்கி வரும் இந்த பிரச்சனைக்கு தற்போது நிபோங் திபால் தொகுதி மலேசிய மக்கள் சக்தி கட்சி எடுத்த நடவடிக்கையின் வாயிலாக இப்போது விடிவு காலம் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles