31.7 C
Kuala Lumpur
Sunday, July 5, 2026

Vetri

சிலாங்கூர் மாநிலத்தில் 50 புதிய கிளைகள் அமைக்கப்படும் மீரா உதவித் தலைவர் மணியம் அறிவிப்பு

🔥 Views : 7
👁 Reading Now : 41

சிலாங்கூர் மாநிலத்தில் விரைவில் 50 புதிய கிளைகள் அமைக்கப்படும் என்று மீரா கட்சியின் தேசிய உதவித் தலைவர்களில் ஒருவரான என். எஸ். மணியம் தெரிவித்தார்.
மீரா கட்சியின் உதவி தலைவர்களாக
டத்தோ குமார் அம்மன், என்.எஸ். மணியம் நியமனம் கடந்த வாரம் நியமிக்கப்பட்டனர்.
மலேசிய சிறுபான்மை உரிமைகள் செயல் கட்சி என்றழைக்கப்படும்
மீரா கட்சிக்கு இடைக்காலத் தலைவராக கிள்ளான் வட்டாரத்தைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதி கே.பி.சாமி நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது இவரின் தலைமையில் நாடு தழுவிய அளவில் புதிய கிளைகள் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் சிலாங்கூர் மாநிலத்தில் 50 புதிய கிளைகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாக மணியம் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles