
11 வியாபாரிகளுக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டதால், பினாங்கின் பாயான் பாரு பொதுச் சந்தை இன்று முதல் மூடப்பட்டது.
சந்தையை மூடுவதற்கு சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் 2 மணிக்கு உத்தரவிட்டதாக பினாங்கு டத்தோ பண்டார் டத்தோ இயூ துங் சியாங் கூறினார்.
இங்கு செயல்பட்டு வரும் 159 கடைகளும் சுகாதார அமைச்சின் விசாரனை முடியும் வரையில் மூடப்பட்டிருக்கும் என்றார்.
இதற்கிடையில் நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள் குறித்த விசாரனையும்,இன்றிரவு கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
