34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

யோகமுனிமாறனுக்கு கத்தி வெட்டு; முகமூடி கும்பலின் அராஜகம்!

🔥 Views : 5
👁 Reading Now : 70

இரவுச் சந்தையின் அங்காடிக் கடையொன்றில் உணவு வாங்கிக் கொண்டிருந்த இந்திய இளைஞன்,அடையாளம் தெரியாத முகமூடி கும்பலால் கத்தி வெட்டுக்கு இலக்கானான்.
நேற்று முன்தினம் இரவு சுமார் 7.30 மணியளவில் தென் செபராங் பிறை சிம்பாங் அம்பாட் தாமான் மெராக்கில் நிகழ்ந்த இத்துணிகரச் சம்பவத்தில் 25 வயது எம்.யோகமுனிமாறன் கடுமையான காயமடைந்தார்.
இரு கைகள்,காலின் தொடைப்பகுதி தலையின் பின்புறம் ஆகிய பகுதிகளில் கடுமையான வெட்டுக்கு இலக்காகி சிகிச்சைக்காக செபராங் ஜெயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தென் செபராங் பிறை மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்ரிண்ட்டெண்டன் லீ சோங் செர்ன் கூறினார்.
முகமூடி அணிந்திருந்த அறுவர் இவரை தாக்கிவிட்டு தப்பி சென்றதாக தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் புலன் விசாரணையை விசாரணையை மேற்கொண்டு வருவதாக ஓசிபிடி மேலும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles