
கோவிட் நோய்த்தொற்று தாக்கத்தினால் இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை சிலாங்கூரில் 117 தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இக்காலக்கட்டத்தில் நாடு முழுவதும் நிகழ்ந்த 468 தற்கொலைச் சம்பவங்களில் அதிக எண்ணிக்கையை பதிவு செய்த மாநிலமாக சிலாங்கூர் உள்ளது.
கடந்தாண்டில் நாடு முழுவதும் 631 தற்கொலைச் சம்பவங்களும் அதற்கு முந்தைய ஆண்டில் 609 சம்பவங்களும் பதிவானதை காவல் துறையின் தரவுகள் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
