
கோவிட் -19 காலத்தில் மக்களின் பாதுகாப்பு கருதி கடமையில் ஈடுபட்டு முன்னிலைப் பணியாளர்களுக்கு உதவும் நோக்கத்தில் தென் செபராங் பிறை மாவட்டத்தில் உள்ள 7 சாலை தடுப்புப் பகுதிகளில் பணியாற்றிவரும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
போலீஸ் அதிகாரிகள், இராணுவப் படையினர் ஆகியோருக்கு மதிய உணவு, முகக்கவசம் கிருமி நாசினி,தேசியக் கொடி ஆகியவை வழங்கப்பட்டதாக தென் செபராங் பிறை மாவட்ட மலேசிய குற்றத்தடுப்பு அறவாரியத்தின் தலைவர் கேப்டன் பரமகுருபாலன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பொது தற்காப்புப் படையின் தலைவர் கேப்டன் சேகர் ஆகியோருடன் அரசுசாரா இயக்கங்களின் பொறுப்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
