27.8 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

மூன்று ஆண்டுகளில் இரண்டு அரசாங்கம் கவிழ்ந்து விட்டது! பொதுத்தேர்தலுக்கு பெர்சே ஆதரவு

நாட்டில் கட்சி தாவலினால் மூன்று ஆண்டுகளில் இரண்டு அரசாங்கம் கவிழ்ந்துவிட்டது.
கட்சித் தாவலினால் ஆட்சி கவிழும் போது வாக்களித்த மக்கள் வெறும் பார்வையாளர்களாகவே இருக்க முடிகிறது.
அந்த வகையில் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு பெர்சே தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
அணி தாவியவர்களால் 2018 இல் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியை கவிழ்த்துவிட்டு பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கத்தை அமைத்தனர்.
அம்னோ எம்பிக்கள் ஆதரவை மீட்டுக் கொள்கிறோம் என்று அறிவித்ததை தொடர்ந்து டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கம் பெரும்பான்மையை இழந்து ஆட்சி கவிழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles