
இந்திய மும்பை பால்கர் மாவட்டம் மர்பி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகாந்த் என்ற மீனவர்.
இரு தினங்களுக்கு முன்னர் படகில் மீன்பிடிக்கச் சென்றார். வலையில் சுமார் 150 மீன்கள் இருந்தன. அவருடன் சென்றவர்கள் அந்த மீன்களைப் பார்த்ததும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். ஏனென்றால் அந்த மீன்கள் அதிக விலை போகக்கூடிய கோல் மீன்கள் ஆகும்
கோல் மீன் ஒரு சுவையான உணவு மட்டுமல்ல, பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. பல்வேறு நாடுகளில் மிகவும் விலை மதிப்புமிக்கது.
இந்த மீனின் பாகங்கள் மருந்துகள் மற்றும் பிற விலை உயர்ந்த பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன.
இவர் கரை திரும்பியதும் மீன்களை ஏலம் விட்டார்.
சுமார் 1.33 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. இதன் மூலம்
ஒரே நாளில் மீனவர் கோடீஸ்வரரானார்.



