
ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலிபான்கள் மற்ற நாடுகளை சேர்ந்தவர்களை வெளியேறும்படி கூறி இருக்கிறது.
. அந்த வகையில் இந்தியாவில் இருந்து சென்று சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் மறுபடியும் இந்தியாவுக்குள் நுழையலாம் என்று இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கனவே ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதரவாளர்கள் இந்தியாவில் பல இடங்களில் செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக டில்லி, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு போன்ற இடங்களில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் இருப்பதாக உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது. இந்தியா திரும்பும் ஐ.எஸ். பயங்கரவாதிகள், அவர்களுடன் இணைந்து தாக்குதல் நடத்தலாம் என்று கருதுகின்றனர்.
இவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திவிடாமல் தடுக்க அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
