
புதிய பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான அரசாங்கத்தில் ஐபிஎப் கட்சிக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்று ஐபிஎப் இளைஞர் பிரிவு தலைவர் கணேஷ்குமார் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
டான்ஸ்ரீ எம்.ஜி. பண்டிதன் மற்றும் டத்தோ எம். சம்பந்தன் காலம் தொட்டு ஐபிஎப் கட்சி தேசிய முன்னணிக்கு பிளவுபடாத ஆதரவை வழங்கி வந்தது.
இப்போது புதிய தலைவர் டத்தோ லோகநாதன் தலைமையில் ஐபிஎப் கட்சி தேசிய முன்னணிக்கு முழு விசுவாசத்துடன் இருக்கிறது.
புதிய பிரதமராக பதவியேற்றுள்ள டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான அரசாங்கம் ஐபிஎப் கட்சிக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும்.
இதற்கு முன்னர் ஐபிஎப் கட்சிக்கு செனட்டர் பதவி வழங்கப்பட்டது.
இப்போது மீண்டும் ஐபிஎப் கட்சிக்கு செனட்டர் பதவி வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
