27.6 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் மக்களுக்கு அரசு நிதியுதவி வழங்கப்பட வேண்டும்

🔥 Views : 13
👁 Reading Now : 38

நோய்த்தொற்று தாக்கத்தினால் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் மக்களுக்கு அரசாங்கம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று ஜொகூர் பாரு ஜசெக கிளைத் தலைவர் சுரேந்திரன் பலராமன் கேட்டுக்கொண்டார்.
கடந்த காலங்களில் மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தும் இடங்களில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு அரசாங்கம் 700 வெள்ளி உதவித்தொகையை வழங்கியது.
ஆனால் வீட்டில் தங்களை தனிமைப்படுத்தி கொள்பவர்களுக்கு அதே போன்ற நிதி வழங்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இரு வாரங்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் இவர்களால் வேலைக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
மேலும் இவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதால் அரசாங்கம் இவர்களுக்கும் சிறப்பு நிதி உதவி வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நோய்த்தொற்றால் மக்கள் பெரிதும் கஷ்டப்படுகிறார்கள். இதில் நோய்த்தொற்று கண்டவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கும் அரசாங்கம் கருணை காட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles