27.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

அவ்வையாரின் ஆத்திச்சூடி நூல் மலாய் மற்றும் ஆங்கில மொழியில் மொழிபெயர்ப்பு

🔥 Views : 8
👁 Reading Now : 40

அவ்வையாரின் ஆத்திச்சூடி நூல் மலாய் மற்றும் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
லீலா சக்கரபாரதி என்பவரால் மலாய் மற்றும் ஆங்கில மொழியில் அவ்வையாரின் ஆத்திச்சூடி நூல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மொழிபெயர்க்கப்பட்ட அவ்வையாரின் ஆத்திச்சூடி நூலை கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெற்றுக்கொண்டுள்ளார்.
அவ்வையாரின் ஆத்திச்சூடி நூல் தம்மைப் பெரிதும் கவர்ந்து இருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது முகநூலில் பதிவு செய்திருக்கிறார்.
இந்த நூலில் இடம்பெற்றுள்ள சில வரிகள் குறிப்பாக ஊக்கமது கைவிடேல், நிலையில் பிரியேல் வரிகள் ஒரு போராட்டத்தின் போது இருக்கவேண்டிய பண்புகளை எடுத்துக்காட்டுவதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெரிதும் புகழ்ந்திருக்கிறார்.
பிற இனத்தவரின் சிறந்த படைப்புகளை மற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பின் மூலம் தனது அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles