32.9 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் குடும்பத்திற்கு ஹொங் லியோங் வங்கி உதவி

கோவிட் -19 தொற்றுக் காலத்தில் பல்வேறு சிரமங்களை எதிநோக்கி வரும் தென் செபெராங் பிறை பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடும்பத்திற்கு நிபோங் திபால் தாமான் பஞ்சோர் இண்டாவில் செயல்பட்டு வரும் ஹொங் லியோங் வங்கி நிர்வாகம் உதவிப் பொருட்களை வழங்கியது.
குடும்பங்களின் தேவைகளை அறிந்த பள்ளியின் தலைமையாசிரியை வனிதாமணி முயற்சியால் 22 குடும்பங்களின் வீட்டிற்கு தேவையான உதவிப் பொருட்கள் கிடைக்கப்பெற்றது.
மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து உதவிப் பொருட்களைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த வங்கியின் அதிகாரிகளில் ஒருவரான எமிலி, அதிகாரிகள்,
பள்ளியின் துணை தலைமையாசிரியை காந்திமதி,பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரியக்குழுத் தலைவர் முனுசாமி நரசிம்மன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
உதவிகளை வழங்கிய வங்கி நிர்வாகத்திற்கு தலைமையாசிரியை வனிதாமணி நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles