32.9 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

முதல் கட்டமாக 43,120 தடுப்பூசியை பினாங்கு அரசாங்கம் இன்று பெற்றது

பினாங்கு மாநிலத்திற்கு சுகாதார அமைச்சு சிறப்பாக அங்கீகரித்துள்ள 200,000 தடுப்பூசியின் ஒரு பகுதியை பினாங்கு அரசாங்கம் இன்று பெற்றுக் கொண்டது.முதல் கட்டமாக 43 ,120 தடுப்பூசிகள் அனுப்பப்பட்டதாக பினாங்கு மாநில முதல்வர் சோவ் கோன் யோவ் கூறினார்.
இந்த தடுப்பூசிகள் மாநிலத்திலுள்ள 5 மாவட்டங்களுக்கு அனுப்பப்படும்..
மாநில மக்கள் அனைவரும் குறிப்பாக முதியோர்கள் தடுப்பூசி பெற்றுக் கொள்வது உறுதி செய்யப்படும்.
இதன் மூலமே நமது பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என கூறிய அவர் இதன் வழி மாநிலத்திலுள்ள அனைத்து தடுப்பூசி மையங்களும் முழுமையாக செயல்படும் என தாம் நம்புவதாக குறிப்பிட்டார்.
செப்டம்பர் மாத இறுதிக்குள் 80 விழுக்காடு இளைஞர்களுக்கு இரண்டு தடுப்பூசிகள் செலுத்தும் இலக்கு நிறைவுப்பெறும் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles