34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

பாதுகாவலர் தேவசகாயம் மரணம்; சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!

🔥 Views : 6
👁 Reading Now : 61

பாதுகாவலர் தேவசகாயம் மரணம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
தேவசகாயம் குடும்பத்திற்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தவறு செய்தவர்கள் யாரும் சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியாது.
அந்த வகையில் இவரின் மரணத்திற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.
தேவசகாயம் குடும்பத்தின் மீது அக்கறை கொண்டிருக்கும் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரனுக்கு இவ்வேளையில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.
மரணம் அடைந்த தேவசகாயத்தின் மனைவி பிலோமினாவிடம் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொண்டார்.
தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் அவரின் குடும்ப உறுப்பினரிடம் பிரதமர் உரையாடி இருக்கிறார் என்று குலசேகரன் தெரிவித்தார்.
பெரும்பாலான மலேசியர்கள் வெளிப்படுத்திய வேதனையை பிரதமரும் வெளிப்படுத்தி இருக்கிறார் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles