28.5 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

மாநிலங்கள் கடப்பது தொடர்பில் பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும்

🔥 Views : 6
👁 Reading Now : 63

மாநிலங்கள் கடப்பது தொடர்பில் பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கேட்டுக்கொண்டுள்ளார் தங்களது குடும்ப உறுப்பினர்களை சந்திக்க பொதுமக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
மேலும் மாநிலம் கடந்து செல்லவும் தயார் நிலையில் உள்ளனர்.
மாநிலம் கடந்து செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் இப்போதைக்கு அனைவரும் பொறுமை காக்க வேண்டும்.
செப்டம்பர் மாத இறுதிக்குள் நாட்டில் 60 விழுக்காடு மக்களுக்கு முழுமையாக 2 தடுப்பூசி போட்டு முடிக்கப்படும்.
மேலும் மாநிலங்கள் கடப்பது தொடர்பில் சுகாதார தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles