28.5 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

மாரா இளநிலை அறிவியல் கல்லூரி; தாய்மொழிப் பள்ளி மாணவர்களுக்கும் வாய்ப்பு வேண்டும் முன்னாள் துணை அமைச்சர்கள் கோரிக்கை

🔥 Views : 5
👁 Reading Now : 20

பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கும் தாய்மொழிப் பள்ளி மாணவர்-களுக்கும் மாரா அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் முன்னாள் துணை அமைச்சர்கள் இருவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்வித் துறை முன்னாள் துணை அமைச்சர் தியோ நீ ச்சிங், புறநகர் மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் சிவராசா ராசையா ஆகிய இருவரும் வெளியிட்ட அறிக்கையில் மாரா அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரியில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கான 10% சிறப்பு ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

கடந்த 2002-இல் இந்த சிறப்பு ஒதுக்கிடு அறிமுகப்படுத்தப்பட்டது.

பூமிபுத்ரா மாணவர்களுக்கான உரிமையில் குறுக்கிடுவது நோக்கமல்ல; அதேவேளை, பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கும் கல்வி வாய்ப்பைக் கேட்பதே இந்த அறிக்கையின் இலக்கு என்பதையும் இவ்விருவரும் தெளிவு படுத்தி உள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles