27.9 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

வங்கிகளில் அதிக பணம் எடுக்கும்போது எச்சரிக்கையாக இருங்கள்!

வங்கிகளில் அதிக பணம் எடுக்கும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுமக்களை புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோஸ்ரீ அப்துல் ஜாலில் ஹசான் கேட்டுக் கொண்டார்.
வங்கிகளில் அதிக பணம் எடுக்கும்போது பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
துணைக்கு யாராவது அழைத்துச் செல்ல வேண்டும். அல்லது
அல்லது வங்கி பணியாளர்கள் உதவியோடு பணத்தை மீட்க வேண்டும்.
மேலும் சுற்றுப்புறங்களையும் அவர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
செராஸ் வங்கியில் பெண்மணி ஒருவர் 1 லட்சத்து 50,000 வெள்ளியை எடுத்து வெளிவந்தபோது அவரைக் குறிவைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அவரின் கார் டயரையும் ஓட்டை போட்டுள்ளனர்.
லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் இவர்களை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் பிடித்தனர்.
இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆடவர் ஒருவருக்கு துப்பாக்கி சூடு காயம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே பொதுமக்கள் வங்கியில் அதிக பணம் எடுக்கச் சென்றால் துணையுடன் செல்லும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles