
சுகாதார தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா அனைத்துலக அறுவை சிகிச்சை கூட்டுறவு ” International Surgical Fellowship Award “
எனும் உயரிய விருதை பெறுகிறார்.
ஐஎஸ்எஸ் ( ISS ) எனப்படும் அனைத்துலக அறுவை சிச்சைக் கழகத்திடமிருந்து அவர் இந்த விருதினை பெறுகிறார்.
ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கி நாளை வரையில் நடைபெறும்
மெய்நிகர் அறுவை சிகிச்சை வாரத்தின் போது ” The Virtual Surgical Week “
( VSW 2021 ) இந்த அங்கீகாரத்தை அவர் பெற்றார்.
கடந்த 5 ஆண்டுகளாக ISS நிர்வாக உச்சமன்ற உறுப்பினராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கோவிட் -19 தொற்றை துடைத்தொழிக்கும் போராட்டத்தில் உலகின் சிறந்த மூன்று மருத்துவர்களோடு இவரின் பெயரும் முன்மொழியப்பட்டுளதாக சீன தொலைக்காட்சி செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதே விருதினை இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் கவுராவ் அகர்வால் மற்றும் சவூதி அரேபியாவைச் சேர்ந்த யூசோப் சாலே அல் – அலாவி
ஆகிய இருவரும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
