34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ஆடவனுக்கு தடுப்பு காவல் மேலும் நீட்டிப்பு

🔥 Views : 7
👁 Reading Now : 25

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஆடவனுக்கு எதிரான காவல் தடுப்பு மேலும் ஆறு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேல் விசாரணைக்கான போலீசார் செய்துக் கொண்ட விண்ணப்பத்திற்கு புக்கிட் மெர்தாஜாம் மாஜிஸ்திரேட் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முகமட் பிர்டாவுஸ் அப்துல் வஹாப் அனுமதி வழங்கினார்.
கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி அதிகாலை 2 .00 மணியளவில் தென் செபராங் பிறை,சுங்கை ஜாவி தாமான் செருலிங் இமாஸ் குடியிருப்புப் பகுதியிலுள்ள வீடொன்றில் 40 வயது லீ லிங் தீ எனும் மாது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் 29 வயது இந்திய ஆடவனை போலீசார் செய்தனர்.
சம்பவத்தன்று இரவு சுமார் 7.25 மணியளவில்,சம்பந்தப்பட்ட வீட்டின் கட்டிலுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டுக் கிடந்த பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டனர்.
சம்பவத்தின் போது அப்பெண் கூச்சலிட்டதால் வாயில் துணியை வைத்து மூடியதால் அவர் உயிர் இழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles