
தோக்கியோவில் நடைபெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது.
நேற்றிரவு பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தினார். இறுதிப் போட்டியில் இவர் பிரிட்டன் வீரர் டேனியலை 21-14, 21-17 என்ற நேர்செட்களில் வீழ்த்தினார்.
மற்றொரு இந்திய பேட்மிண்டன் வீரர் மனோஜ் சர்க்கார் வெண்கலப் பதக்கம் வென்றார்.
