34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

எதிர்கால சமுதாயத்தின் நம்பிக்கைக்குரியகட்சியாக மீரா விளங்கும்!

🔥 Views : 11
👁 Reading Now : 58

டான்ஸ்ரீ மாணிக்கவாசகம், துன் சாமிவேலு, அரசியல் ஆசான் டான்ஸ்ரீ சுப்பிரமணியம், டத்தோ பத்மநாபன், டான்ஸ்ரீ எம்.ஜி. பண்டிதன், டத்தோ பழனிவேலு மற்றும் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் ஆகியோருடன் 50 ஆண்டுகள் அரசியல் பயணத்தின் மூலம் இன்று மீரா கட்சிக்கு தலைவராக பொறுப்பேற்றதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கே.பி. சாமி தெரிவித்தார். .
மீரா கட்சியின் வழி சமுதாயத்திற்கு செய்ய வேண்டியதை என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு களம் இறங்கி இருக்கிறேன்.
எனது நீண்டகால அரசியல் பயணத்தில் துணையாக நின்ற டத்தோ குமார் அம்மன், சிப்பாங் மணியம், கண்ணன் ராமசாமி ஆகியோர் என்னோடு இணைந்திருக்கிறார்கள்.
பணம் இருந்தால் மட்டுமே கட்சியை வழிநடத்த முடியும் என்பதை மாற்றிக் காட்டி மக்கள் ஆதரவோடு புதுடில்லி யில் வெற்றிக் கொடியை நாட்டினார் கெஜ்ரிவால்.
அந்த வகையில் மக்களின் ஆதரவோடு மீரா கட்சியும் வெற்றி நடைபோடும் என்று கேபி சாமி தெரிவித்தார்.
கிண்டலும் கேலியும் செய்தாலும் அது பற்றி எங்களுக்கு கவலையில்லை.
எதிர்கால சமூதாயத்தின் நம்பிக்கைக்குரிய ஒரு கட்சியாக மீராவை உருவாக்குவேன்.
இப்போது நாடு தழுவிய அளவில் மீரா கட்சிக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது..அந்த வகையில் புதிய கிளைகள் படிப்படியாக அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles