28.5 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

ஜொகூர் மாநிலத்தில் மோசமான வெள்ளத்தினால் 300 குடும்பங்கள் பரிதவிப்பு!

🔥 Views : 12
👁 Reading Now : 53

ஜொகூர் மாநிலத்தில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தினால் செனாய் வட்டாரத்தில் உள்ள தாமான் அமான் மற்றும் கம்போங் செபாக்காட் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
இங்கு வாழும் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளத்தினால் பறி தவிப்பதாக ஜொகூர் பாரு ஜசெக கிளைத் தலைவர் சுரேந்திரன் பலராமன் வேதனையோடு தெரிவித்தார்.
13 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்படி ஒரு மோசமான வெள்ளம் ஏறியதால் 300 குடும்பங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
இவர்கள் பெரும்பாலோர் இந்தியர்கள் ஆவர்.
நோய்த்தொற்று ஒருபுறம் மக்களை வேதனையை படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் இன்னொரு பக்கம் வெள்ளம் மக்களை வாட்டி வதைக்கிறது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஜொகூர் மாநில அரசாங்கம் உடனடியாக நிவாரண நிதியாக தலா 500 வெள்ளியை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.


ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இரா. வித்தியானந்தன் உடனடியாக களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்றார் அவர்.
நாங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல வகைகளில் உதவிகளை வழங்கி கொண்டிருக்கிறோம் என்று சுரேந்திரன் பலராமன் ஏஎஸ்டி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles