29.6 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

5,000 குடும்பங்களுக்கு
இமான் கட்சி சார்பில் உணவுக் கூடைகள்

🔥 Views : 10
👁 Reading Now : 32

புனித இரமலான் மாதத்தில் பி40 தரப்பினருக்கு உதவும் நோக்கில் அல்-சலாம் உணவகத்துடன் இமான் கட்சியின் இஹ்யா இரமலான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேரா, கோலாலம்பூர், சிலாங்கூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் ,ஜோகூர், பகாங் ஆகிய மாநிலங்களில் உள்ள 5,000 பேருக்கு சமையல் பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலும், கோலாலம்பூர் இமான் கட்சி முன்களப் பணியாளர்களுக்கும் பொது மக்களுக்கும் ஏறத்தாழ 5,000 உணவுப் பொட்டலங்களும் வழங்கிய வேளையில், சிலாங்கூர் மாநில இமான் கட்சி ஷா ஆலாம், பூச்சோங், சைபர்ஜெயா, கோலா சிலாங்கூர் காப்பார், காஜாங் ஆகியப் பகுதிகளில் முன்களப் பணியாளர்களுக்கு 1,000 உணவுப் பொட்டலங்களும் 1,000 நோன்புக் கஞ்சிப் பொட்டலங்களும் வழங்கியது.

இந்தத் திட்டம் சிறப்பாக வெற்றியடைய உதவிக்கரம் நீட்டிய மாலிக் ஸ்ட்ரீம்ஸ் இயக்குநர் டத்தோ அப்துல் மாலிக், ஏசான் குழும இயக்குநர் டத்தோ ஹாஜி அப்துல் ஹமீட். ஜாக்கெல் நிறுவனம், அல் சலாம் உணவகத்தின் இயக்குநர் டத்தோ அப்துல் ஹாக்கிம் ஆகியோருக்கு இமான் கட்சி நன்றியினைத் தெரிவித்துக் கொண்டது.
அத்துடன், நெகிரி செம்பிலான் மாநில இமான் கட்சியின் தலைவர் டத்தோ ஹாஜி ஷேட் அலியும் அக்கட்சியின் நிலாய் தொகுதித் தலைவர் துவான் ஹாஜி காசிம் ஆகியோர் நீலாயில் இமான் கட்சி நடத்திய ஒரு நிகழ்ச்சியில், 50 தனித்து வாழும் தாயார்களுக்கு அடிப்படை சமையல் பொருட்களையும் நோன்புப் பெருநாள் அன்பளிப்பும் வழங்கப்பட்டன. அதனை அல் சலாம் குழுமத்தின் இயக்குநர் டத்தோ அப்துல் ஹாக்கிம் எடுத்து வழங்கினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles