34 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

அதிரடி படைக்க தயாராகிவிட்டது
மலேசிய இந்திய பெண்கள் கால்பந்து அணி

🔥 Views : 8
👁 Reading Now : 40

மலேசிய கால்பந்து வரலாற்றில் முதன் முறையாக மலேசிய இந்திய பெண்கள் கால்பந்து குழு பங்கேற்கிறது என்று பினாங்கு மாநில இந்தியர் கால்பந்து சங்கத்தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார் இதுவரை மலேசியா கால்பந்து சங்கம் நடத்திய துன் ஷரிபா கிண்ண கால்பந்து போட்டியில் மலேசிய இந்திய பெண்கள் அணி பங்கேற்றது இல்லை .
வரும் ஜூலை மாதம் தொடங்கும் துன் ஷரிபா பெண்கள் கால்பந்து போட்டியில் முதன்முறையாக மலேசிய இந்திய பெண்கள் அணி பங்கேற்கிறது என்று அவர் சொன்னார் .


இந்த போட்டிக்காக நாடு தழுவிய அளவில் ஆட்டக்காரர்கள் தேர்வை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறோம். பினாங்கு சிலாங்கூர் கோலாலம்பூர், பேரா, நெகிரி செம்பிலான், ஜொகூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்திய பெண்கள் தேர்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ஆட்டம் மகிழ்ச்சியை தருகிறது என்றார் அவர். இதனிடையே பினாங்கு இந்தியர் கால்பந்து சங்கம் ஆண்டுதோறும் மலேசிய இந்தியப்பெண்கள் இடையிலான கால்பந்து போட்டியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இம்முறை அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த இந்தியப் பெண்கள் போட்டியில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles