32.9 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

மரங்கள் நடும் பிரச்சாரத்தில் அரசாங்கம் இருமுனை அணுகுமுறையை பின் பற்ற வேண்டும்

வரும் ஐந்து ஆண்டுகளில் நாட்டை பசுமைப்படுத்தும் நடவடிக்கையாக அரசாங்கம் 100 மில்லியன் மரங்களை நடப்போவதாக அறிவித்துள்ளதை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வரவேற்பதாக அதன் கல்விப் பிரிவுத் தலைவர்
என் வி.சுப்பாராவ் தெரிவித்தார்.
இருப்பினும் அத்திட்டத்தை கையாளும் பணியை எந்தவொரு தனியார் ஒப்படைக்காமல் வனத்துறையின் மேற்பார்வையில் நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதன்வழி பிரச்சாரங்கள் குறிக்கோள்களை அடைவதோடு,அதிக பணத்தையும் மிச்சப்படுத்த முடியும்.
மக்களோடு இணைந்து அரசாங்கம் இந்த திட்டத்தை தொடங்கினால்,மரத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் அறிந்துக் கொள்வர்.
இந்த இருவழி அணுகுமுறை பின்பற்றப்பட்டால் நிச்சயம் வெற்றிப்பெற முடியுமென பினாங்கு பயனீட்டாளர் சங்கம் நம்புவதாக என்.வி.சுப்பாராவ் கூறினார்.
மேலும் மரம் நடும் பிரச்சாரம் இரு முனை அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்.
குறிப்பாக சரியான இடத்தில சரியான மரங்களை நடவு செய்வதை அதிகரிக்கவும்,அதே சமயத்தில் காடுகள் அழிக்கப்படுவதையும் கட்டுப்படுத்த முடியும் என சொன்னார்.
மரங்கள் இயற்கையின் வரங்கள்,மனிதனின்றி மரங்கள் வாழும்,ஆனால் மரங்களின்றி மனிதர்கள் வாழ முடியாது என கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles