
ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் நடைபெறும் பரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய நேற்று 5ஆவது தங்கத்தை வென்றது. நேற்றிரவு நடைபெற்ற பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்றார். இறுதிப்போட்டியில் ஹாங்காங் வீரர் மான் கை என்பவரே 17-21, 21-16, 17-21 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கிருஷ்ணா நாகர் தங்கம் வென்று சாதனை படைத்தார். இதன் மூலம் பரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என்று மொத்தம் 19 பதக்கங்களை வென்றுள்ளது.
