30.3 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

நேரடியாக செய்தி சேகரிக்க உத்துசான், என்எஸ்டி-க்கு மக்களவையில் அனுமதி மறுப்பு

🔥 Views : 5
👁 Reading Now : 44

வரும் திங்கட்கிழமை தொடங்கவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் செய்திகளை நேரடியாக சேகரிக்க உத்துசான் மலேசியா, நியூ ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆகியவற்றுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் வரலாற்றிலேயே நாடாளுமன்றச் செய்திகளை தொகுத்து வழங்குவதற்கு உத்துசான் மலேசியாவுக்கு அனுமதி மறுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். மக்களவைக் கூட்டத்தொடர் செய்திகளை தொகுத்து வழங்குவதற்கு ஆர்டிஎம், மலேசிய தகவல் துறை, ஃபினாஸ் ஆகியவை அதிகாரப்பூர்வ தகவல் ஊடகங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. சினார் ஹரியான், பெரித்தா ஹரியான், தி ஸ்டார், தி சன், சின் சியூ டெய்லி, நன்யாங் சியாங் பாவ், மலேசிய நண்பன் ஆகிய நாளிதழ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles