27.5 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

துணை சபாநாயகராக நியமிக்கப்பட்டால் அமாட் மஸ்லான் மீதான வழக்குகள் மீட்டுக் கொள்ளப்படுமா?

🔥 Views : 5
👁 Reading Now : 43

மக்களவையின் துணைச் சபாநாயகர் பதவிக்கு பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோஸ்ரீ அமாட் மஸ்லானை நியமித்தால் அவர் மீதான வழக்குகள் மீட்டுக் கொள்ளப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இப்பதவிக்கான வேட்பாளராக அமாட் மஸ்லானைப் பிரதமர், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் அரசு முன்மொழிந்ததை ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோஸ்ரீ நஸ்ரி அப்துல் அஜிஸ் உறுதிப்படுத்தினார். எனினும், இது தொடர்பில் பேச அமாட் மஸ்லானைத் தொடர்பு கொண்ட போது அவர் பதிலளிக்கவில்லை. முன்னதாகப் பண மோசடி மற்றும் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் பிரதமராக இருந்த போது அவரிடமிருந்து கடந்த 2013ஆம் ஆண்டில்.20 லட்சம் வெள்ளி பெற்றது தொடர்பில். அமாட் மஸ்லான் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles