33.1 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

சாலை தடுப்பு சோதனை நடவடிக்கையில் 4 டன் கிலோகிராம் கெத்தும் இலை சிக்கியது!

🔥 Views : 7
👁 Reading Now : 30

சாலை தடுப்பு சோதனை நடவடிக்கையில் லோரி ஒன்றை மடக்கி சோதனையிட்ட போலீசார் அதிலிருந்து சுமார் 40,000 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 4 ஆயிரம் கிலோகிராம் கெத்தும் இலையை கைப்பற்றினர். நேற்று பிற்பகல் 2.50 மணியளவில் குப்பாங் ஜெராய் சாலை தடுப்பு சோதனை நடவடிக்கையில் இரு ஆடவர்களையும் கைது செய்ததாக பாலிங் மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்ரிண்ட்டெண்டன் சம்சுடீன் மாமாட் கூறினார். .சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சென்ற அந்த லோரியை போதைப்பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மடக்கி சோதனையிட்டனர். லோரியின் பின்புறத்தில் கருப்பு நிற பிளாஸ்டிக் பைகளில் இருந்தா 4 டன் கெத்தும் இலைகள் கைப்பற்றப்பட்டதாக சொன்னார். தென் பகுதிக்கு செல்வதற்காக பெண்டாங்கிலிருந்து ,கிரிக் சென்றுக் கொண்டிருந்த அந்த லோரியில் இருந்த சந்தேக நபர்கள் 2 பேரும் போதைப் பொருள் உட்கொண்டிருந்ததாக கூறிய அவர், மேல் விசாரணைக்காக இன்று முதல் நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஓசிபிடி சம்சுடீன் மாமாட் மேலும் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles