
வரும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் எந்தச் சின்னத்தை பயன்படுத்தும் என்பதை பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள மன்றம் முடிவு செய்யட்டும் என்று விலாயா மாநிலத்தைச் சேர்ந்த ஜசெக இளைஞர் அணி உச்சமன்ற உறுப்பினர் டிக்கம் தெரிவித்தார். பொது சின்னமாக தங்கள் கட்சியின் சின்னத்தை பயன்படுத்து வேண்டும் என்று விலாயா மாநிலத்தைச் சேர்ந்த கெஅடிலான் முடிவு செய்துள்ளது. இதை ஜசெக கூட்டரசு பிரதேச இளைஞர் அணி நிராகரித்து விட்டது. கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் கெஅடிலான் சின்னத்தில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் வரும் தேர்தலில் எந்த சின்னத்தை பயன்படுத்துவது என்பது தொடர்பில் பக்கத்தான் ஹரப்பான் தலைவர்களிடம் விட்டுவிடுகிறோம். , அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் பொதுவான ஒரு சின்னத்தை பயன்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். மக்களின் நம்பிக்கையைப் பெற குறிப்பாக நம் நாட்டில் அரசியல் நிலையற்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகள் வலுவான கொள்கை மற்றும் ஒற்றுமையைக் காட்டுவது மிக அவசியமானது என்று ஜசெக புக்கிட் ஜாலில் கிளைத் தலைவருமான டிக்கம் லூர்ட்ஸ் தெரிவித்தார்.
