
இன்று உலகம் முழுவதும் இந்து பெருமக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி வருகிறார்கள். நோய்த்தொற்று தாக்கம் சற்று குறைந்த இருக்கும் வேளையில் மலேசியாவில் ஆலயங்களில் வியாகரை வழிபட கடுமையான Sop விதிமுறைகளை பின்பற்றி பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாட்டின் புகழ்பெற்ற கோர்ட்டு மலை பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது அதன் பின்னர் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகர் பெருமானை வழிபட்டனர். கோர்ட்டு மலை பிள்ளையார் ஆலயத்தில் சிவஸ்ரீ சிவகுமார் மற்றும் சிவஸ்ரீ சிவனாந்தா ஆகியோர் தலைமையில் பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு தடுப்பூசிகள் போட்டுக் கொண்டார்கள் மட்டுமே ஆலயத்ததிற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பிரிக்பீல்ட்ஸ் கற்பக விநாயகர் கோயில், ஜாலான் புடு புரூணை விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
